மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குட் நியூஸ்... ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... புதிய தேதியை வெளியிட்ட யூஐடிஏஐ.!
அதார் அட்டை ஒவ்வொரு இந்தியனின் தனித்துவமான அடையாள அட்டையாகும். இது இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆதார் அடையாள அட்டையை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த ஆதார் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் ஜூன்14ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் ஒவ்வொரு குடிமகனும் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது . தற்போது அதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய அறிவிப்பின்படி அதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14 2023 ஆகும்.இந்த அறிவிப்பானது அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காகத்தான். மேலும் அதார் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய முகவரி, புகைப்படம், செல்போன் நம்பர் போன்ற அடிப்படை தகவல்களில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதனை முதலில் செய்துவிட்டு பின்னர் புதுப்பிக்க வேண்டும்.
தற்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பானது ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்காகத்தான் என்றும் அதில் இருக்கக்கூடிய திருத்தங்களுக்கானது அல்ல எனவும் யூஐடிஏ தனது அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது.