தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அந்த ஒற்றை மனிதரின் வியூகம் தான் இந்த வெற்றிக்கு காரணம்! மைதானத்தை குறை கூறாமல் பாராட்டிய இங்கிலாந்து முன்னாள் வீரர்.!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது. அகமதாபாத் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசிய போது, முன்னணி கிரிக்கெட்டர் பலர் மைதானத்தை குறை கூறினர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் மைதானமே கிடையாது என்ற அளவிற்கு குறை கூறினர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான், இந்திய கேப்டன் விராட் கோலி ஆரம்பத்திலிருந்தே சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவகையில் சிறப்பான பீல்ட்டிங்கை தயார்படுத்தினார்.
முதல் இன்னிங்ஸ்ஸில் இருந்தே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி வந்தனர். ஸிலிப் , கவர் , லாங் ஆன் என அனைத்து திசையிலும் பீல்ட்டிங் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். விராட் கோலியின் வியூகம் சரியாக அமைந்தது. இந்தியாவிற்கு எனது பாராட்டுக்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரீம் ஸ்வான் பாராட்டியுள்ளார்.