தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
Green Comet: அடடே.. 50,000 ஆண்டுகளுக்கு பின் வானில் தென்படும் பச்சை வால் நட்சத்திரம்.. மக்களே தவறவிடாதீங்க...!
பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகில் இன்று வால் நட்சத்திரம் வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிரீன் கோமெட் (Green Comet) என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம், கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே வந்து செல்கிறது.
இந்த வால் நட்சத்திரத்தை வானியல் ஆய்வாளர்கள் Comet C2022 E3 என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். லக்னோவில் உள்ள இந்திரா காந்தி வானியல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இதனை தொலைநோக்கி உதவியுடன் காணலாம்.
புவியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகே கோமெட் வால் நட்சத்திரம் வந்து செல்வதால், அதனை காண கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 30, 31 மற்றும் பிப் 1ம் தேதிகளில் மாலை நேரத்தில் வடக்கு திசையில் சூரிய மறைவுக்கு பின்னர் வால் நட்சத்திரம் தென்பட தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.