மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முக்கோண காதலால் பயங்கரம்; தோழனை கொடூரமாக கொலை செய்த நண்பன்.. பதறவைக்கும் சம்பவம்.!
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சோழா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்வப்னில் பிரஜாபதி (வயது 22). இவரின் நண்பர் வேதந்த் ராஜா (வயது 22). இருவரும் நபர்கள் ஆவார்கள்.
இவர்களில் ராஜா நியூசிலாந்து நாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படித்தவர் ஆவார். சமீபத்தில் இவர் அகமதாபாத் வந்துள்ளார். நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்.14ம் தேதி பிரஜாபதி திடீரென மாயமானார். நண்பர் ராஜாவுடன் சென்ற அவரின் நிலை தெரியவில்லை. இதனால் பிரஜாபதியின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் அக்.14 அன்று மாலை புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, அக். 15ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பிரஜாபதியின் உடல் தனது காரில் இருப்பதாக, காரை காவல் நிலையத்திற்கு அருகே விட்டுவிட்டு தகவல் தெரிவித்து ராஜா அங்கிருந்து தப்பி சென்றார்.
இதனையடுத்து, விரைந்து செயல்பட்டு அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், முக்கோண காதல் காரணமாக பிரஜாபதி கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
கொலை செய்யப்பட்ட ப்ரஜாபதியும், அவரின் நண்பர் ராஜாவும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று தனது நண்பனை விஸ்வகர்மா பாலம் அருகே அழைத்து சென்ற ராஜா, அங்கு ப்ரஜாபதியை அடித்தே கொலை செய்துள்ளார். பின் என்ன செய்வதென்று தெரியாமல், காரில் உடலை வைத்தவாறு சுற்றி வந்துள்ளார்.
இறுதியில் காவல் நிலையம் வரை புகார் சென்றதை தெரிந்துகொண்டு, காவல் நிலையத்திற்கு வாகனத்தை இயக்கி சென்று தகவல் தெரிவித்து தப்பி சென்றது தெரியவந்தது. அக்.16ம் தேதியான நேற்று ராஜா கைது செய்யப்பட்டார். விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.