மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷாரய்யா உஷாரு.. பரிசு தரோம்னு அடிக்கடி போன் வருதா?.. மூதாட்டியிடம் ரூ.2 கோடி ஆட்டையை போட்ட மர்மகும்பல்..!!
இன்டர்நெட் நம்மிடையே அறிமுகமானதிலிருந்து சட்டவிரோத கும்பல் அதை வைத்து சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டது. நமது வங்கியில் இருக்கும் பணம் பத்திரமாக இருப்பதை நாம் மிகவும் கண்காணிப்புடன் உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்றுளவில் இருக்கிறோம்.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த 61 வயது பெண்மணிக்கு விமான சுங்கத்துறை அதிகாரிகள் என்று தொடர்பு கொண்ட நபர்கள் அவருக்கு வந்துள்ள பரிசு பொருட்களை பெற வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்று கூறி மொத்தமாக ரூ.2 கோடியை அபகரித்திருக்கின்றனர்.
பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான நபர் வெளிநாட்டில் இருந்து தான் பரிசுகள் அனுப்புவதாக தன்னை ஏமாற்றியது தாமதமாக அவருக்கு புரியவே, இது குறித்து பெண்மணி ஹரியானா மாநிலத்தில் உள்ள மனேஸ்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.