பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து கோர விபத்து.. 3 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து.!



Himachal Pradesh Car Accident 3 Died

சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஆற்றில் கார் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள காதமுக் - கரோலா நெடுஞ்சாலையில் இன்று 3 பேருடன் கார் பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த கார் உலான்சா பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்லும்போது, தீடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஆற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பிற வாகன ஓட்டிகள், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

himachal pradesh

காரில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்களின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் யார்? எங்கிருந்து எங்கு? சென்று கொண்டு இருந்தார்கள் என்பது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.