மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க... இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி.. குறைகிறது சோப்புகள் விலை., அதிரடி அறிவிப்பு.!
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாததாக, தற்போதைய காலகட்டத்தில் மாறி இருப்பது சோப். இதன் விலை அந்தந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
இந்த நிலையில், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது சோப்புகளின் விலைகளை 2 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, Surf Excel, Rin, Lifebuoy, Dove, Wheel Green Bar, Lux சோப்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலையானது குறைந்துள்ள காரணத்தால், இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு வருடங்களாக மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் சோப்புகளின் விலை உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் விலைகள் குறைந்து பொருட்கள் சந்தைக்கு வரும்.