மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோர சம்பவம்.. மகாராஷ்டிராவில் வெடி மருந்து ஆலையில் விபத்து.. உடல் சிதறி பலியான தொழிலாளர்கள்.!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அடுத்த பசார்கான் கிராமத்தில் சோலார் காஸ்ட் பூஸ்டர் என்ற வெடி மருந்து ஆலை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் இந்த ஆலையில் வெடி மருந்துகளை பேக்கிங் செய்தபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து பெரிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து வந்த 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
மேலும் ஆலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்த ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தார்கள் என்றும் இதுவரை எத்தனை பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளார்கள் என்பது குறித்த தகவல் முழுவதுமாக தெரியவில்லை. இருப்பினும் சில தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணியில் இருந்த தொழிலாளர்கள் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.