மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பூட்டிய வீட்டில் வீசிய துர்நாற்றம்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடக மாநிலத்தில் மூன்று நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில், இருந்த இருவருடைய உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த வம்சிதர் பசிபிளடி தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தினவம்சி. இந்த தம்பதியினர் இருவரும் ஓசூர் அருகே உள்ள ஜெபராணி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மாலை வீட்டின் ஜன்னல் வழியாகவும், சிறிய சந்து வழியாகவும் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் ஜெபராணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். என்னிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருடைய உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.