அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடப்பாவிகளா.! இறந்த பின்னுமா? மூன்று நாட்களாக மனைவியை புதைக்க விடாமல் கணவன் செய்த காரியம்!! வெளியான பகீர் காரணம்!!
ஒடிசாவில் உள்ள மயூர்பாஞ்ஜ் மாவட்டத்தில் குலசேய் என்ற கிராமத்தில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு அவரது உறவினர் பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்கள் ஊர் வழக்கப்படி திருமணத்தின்போது மணப்பெண்ணின் வீட்டார்கள் வரதட்சணையாக இரண்டு மாடுகள், ஒரு ஆடு, 3 புடவைகள் வழங்க வேண்டும். ஆனால் இவருக்கு எந்த வரதட்சனையும் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது மனைவி திடீரென உயிரிழந்துவிட்டார். இதனால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் தனக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணையை கொடுத்தால்தான் அவரது உடலை இறுதி சடங்கு செய்ய விடுவேன் என அந்த நபர் தகராறு செய்துள்ளார்.
மேலும் கடந்த 3 நாட்களாக அவரிடம் உறவினர்கள் எவ்வளவோ பேசியும் அவர்கள் மனம் இறங்கவில்லை. இதனை தொடர்ந்து இது குறித்து உறவினர்கள் போலீசாரிடம் தகவல் கூறியநிலையில் அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரிடம் தீவிர வாக்குவாதம் செய்து இறுதியில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.