அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்குள் வந்த ராணுவ வீரர்! படுக்கையறையில் வேறொருவருடன் இருந்த மனைவி. பதறி போன கணவர்!
அரியானா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதியன்று மனைவிக்கு போன் செய்து அக்டோபர் 2-ம் தேதி நான் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சுரேஷ், செப்டம்பர் 30ம் தேதியன்றே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அவர் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வீட்டிற்குள் படுக்கையறைக்கு சென்றுள்ளார். அங்கு படுக்கையில் மனைவியுடன் அவருடைய பேஸ்புக் நண்பன் தீபக் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரின் மனைவி சுரேஷிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத சுரேஷ் யமுனாவின் சகோதரருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து தீபக்கை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிட கூடாது என்பதற்காக அவரின் உடலை சாலை அருகே தூக்கி வீசி சென்றனர்.
அவரது மரண விசாரணையில், தீபக் அதிகமான முறை சுரேஷ்குமாரின் மனைவியுடன் போனில் பேசியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.