மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை ஆபாச படம் பார்க்க சொல்லி கொடுமை படுத்திய கணவன்.! மனைவி எடுத்த அதிரடி முடிவு.!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்ற வாலிபருக்கு சில மாதங்களுக்கு ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில மாதங்களில் பிரதீப் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியை ஆபாச படம் பார்க்கச் சொல்லி கொடுமை படுத்தி வந்துள்ளார்.
மனைவி தான் சொல்வதை கேட்காவிட்டால் சூடு வைப்பது போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், குடிபோதையில் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு சமைத்து தருமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத நிலையில், தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.