பெங்களூர்: பேருந்து ஓட்டுநர் நெஞ்சு வலியால் மரணம்; நடத்துனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்கள்.. கலங்கவைக்கும் சோகம்.!



in-karnataka-bangalore-bmtc-bus-driver-dies-by-heart-at

 

நெஞ்சு வலியால் ஓட்டுநர் மரணமடைய, நடத்துனர் விரைந்து செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றினார்.

 

மயங்கி சரிந்து சோகம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்தவர் ஒப்லெஸ். இவர் பிஎம்டிசி பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவரின் பேருந்தில் ஓட்டுநராக இருப்பவர் கிரண் குமார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இதனிடையே, இன்று இவர்களின் 256 M/1 வழித்தட பேருந்தில், நெலமங்களாவில் இருந்து தாசனப்புரா டிப்போ நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அச்சமயம், திடீரென கிரண் நெஞ்சு வலி ஏற்பட்டு சரிந்து விழுந்தார். 

இதையும் படிங்க: திருத்தணி: ஊராட்சி செயலாளர் நெஞ்சை பிடித்து சரிந்து விழுந்து மரணம்; ஊரக வளர்ச்சி ஆய்வுக்கூட்டத்தில் சோகம்.!

தொடர்ந்து ஓடிய பேருந்து

இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தொடர்ந்து ஓடிய நிலையில், முன்னால் சென்ற பேருந்தின் பக்கவாட்டில் மோதி தொடர்ந்து சாலையில் ஓடியது. பதறிப்போன நடத்துனர் ஒப்லெஸ், நொடிப்பொழுதில் சுதாரித்து ஓட்டுனரை அவரின் இருக்கையில் இருந்து நகர்த்தி, வாகனத்தை விரைந்து நிறுத்தினார். 

karnataka

மாரடைப்பால் சோகம்

அவ்வழியே வந்தவர்கள் ஓட்டுநர் மயங்கி இருப்பதை பார்த்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு கிரண் குமாரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து கிரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, கிரண் குமார் பணியின்போதே மரணம் அடைந்த அதிர்ச்சி காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: விபச்சார விடுதிகளின் கூடாரமாக வேலூர்? சிக்கப்போகும் அரசியல்கட்சி புள்ளிகள், மாமூல் போலீசார்..!