மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 செகன்டுக்குள் வங்கியில் இருந்து 10 லட்சத்த ஆட்டைய போடும் சிறுவன்..! பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டுவரும் வங்கி ஒன்றுக்குள் புகுந்த சிறுவன் ஒருவன் கண்ணிமைக்கும் நொடியில் 10 லட்சம் பணத்தை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் இயங்கிவரும் வங்கி ஒன்றுக்குள் சென்ற சிறுவன் ஒருவன் கேஷியர் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பண கட்டுகளில் சிலவற்றை எடுத்து தான் கொண்டுவந்த பைக்குள் போட்டுகொண்டு அங்கிருந்து சென்றுள்ளான். சிறுவன் என்பதால் அவன் கேஷியர் அறைக்குள் சென்றது யாருக்கும் தெரியவில்லை.
வெறும் 30 நொடிகளில் பணத்தை எடுத்துக்கொண்டு சிறுவன் வாசல்வழியாக வெளியேறும்போது வாசலில் இருந்த அலாரம் ஒலித்துள்ளது. இதனை அடுத்து காவலாளி சிறுவனை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சிறுவன் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டான்.
இதனை அடுத்து வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது, சிறுவன் 20 வயது இளைஞர் ஒருவனுடன் வங்கி உள்ளே வருவதும், கேஷியர் வெளியே செல்லும் நேரம் பார்த்து 20 வயது இளைஞர் சிறுவனுக்கு சைகை காட்டுவதும், சிறுவன் உள்ளே சென்று பணத்தை எடுப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும், காவலாளி சிறுவனை துரத்தும்போது சிறுவன் ஒருபுறமும், 20 வயது இளைஞர் மற்றொரு புறமும் ஓடுவது வங்கிக்கு வெளியே இருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அனைவர் கண்முன்னும் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#NDTVBeeps: In less than 30 seconds, a child stole ₹10 lakh from a bank in Madhya Pradesh's Neemuch district. His brazen burglary was caught on CCTV. pic.twitter.com/6WUm0PvUyJ
— NDTV HOP Live (@NDTVHopLive) July 15, 2020