#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் இரயில் - நடைமேடை இடையே சிக்கி துள்ளத்துடிக்க உயிரிழந்த இளைஞர்; பதறவைக்கும் காட்சிகள்.!
இரயில் பயணத்தில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக சோக சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து, மதுரை நோக்கி தினமும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் சேவை தென்னக இரயில்வே சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் 01:50 மணிக்கு மேல் வழக்கம்போல வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தனது சேவையை தொடங்கிய நிலையில், இரயிலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 25) என்பவர் பயணித்துள்ளார்.
இதையும் படிங்க: 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்; சென்னையில் பகீர்.!
இரயில்-நடைமேடை இடையே சிக்கி பலி
இவர் இரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக தெரியவரும் நிலையில், சைதாப்பேட்டை இரயில் நிலையம் வந்தபோது, நடைமேடையில் கால் சிக்கியுள்ளது. இதனால் இரயிலில் இருந்து வெளியே இழுக்கப்பட்டவர், 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, நடைமேடை - இரயில் இடையே சிக்கி கால் துண்டிக்கப்பட்டு உயிரிழந்தது அம்பலமானது.
பதறவைக்கும் காட்சிகள்
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் இரயில்வே காவல்துறையினர், பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணி நடைமேடையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்கும் பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
#JUSTIN வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த பயணி, ரயிலில் சிக்கி உயிரிழப்பு; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு#Chennai #Saidapet #VaigaiExpress #TrainAccident #news18tamilnadu https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/k6ikjiMCwL
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 3, 2024
வீடியோ நன்றிநியூஸ் 18 தொலைக்காட்சி
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், வைகை விரைவு ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் கால் மோதியதில் கீழே விழுந்து, அதே ரயிலில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறை தகவல்#Saidapet | #Accident | #VaigaiExpress pic.twitter.com/exXXw2KQXq
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 3, 2024
வீடியோ நன்றிபுதிய தலைமுறை தொலைக்காட்சி
இதையும் படிங்க: பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!