நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்; 3 பேர் உடல் கருகி பரிதாப பலி.!



in Telangana Hyderabad Car Fire 3 Died 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் மூன்று பேர் உயிருடன் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது. 

ஹைதராபாத்தில் உள்ள காட்கேசர் பகுதியில் கார் ஒன்றில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்தவர்கள் அதிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: ரேகிங் கொடுமை! 11 வயது சிறுவன் தற்கொலை முயற்சி.. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி செயல்.!

3 பேர் உடல் கருகி பலி

 

இதனால் மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் & மீட்புப் படையினர், நீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அவர்களின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது 

இதையும் படிங்க: தறிகெட்ட வேகம், போதை.. கார் நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் மரணம்.!