வளைவுப்பகுதியில் கவனம்.. லாரி சக்கரத்தில் சிக்கி தீப்பிடித்த டூவீலர்.. தப்பிய உயிர்.. பதறவைக்கும் வீடியோ.!



in Telangana Medak Man Seriously Injured after Road Accident 

 

வளைவுப்பகுதியில் நிற்கும்போது கவனம் தேவை என்பது முக்கியம்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், டூப்ரேன், நரஸ்புர் கூட்டுரோடு பகுதியில் லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த வாகனம் சாலையின் இடப்பக்கம் செல்ல முற்பட்டபோது.

இதையும் படிங்க: படிக்கட்டு பயணத்தால் ஊசலாடும் உயிர்; 16 வயது பள்ளி மாணவர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

சக்கரத்தில் சிக்கியது

அதே திசையில் இருசக்கர வாகன ஒட்டி ஒருவரும் பயணித்த நிலையில், இருசக்கர வாகனம் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கியது.

தீக்காயம்

இதில் சில அடிகள் வாகனம் இழுக்கப்பட்டு, சிதைந்துபோனதால் அங்கேயே தீப்பிடித்தது. மேலும், வாகனத்தில் பயணம் செய்தவர், உடலில் லேசான காயம் மற்றும் பலத்த தீக்காயம் அடைந்தார். 

Telangana

இதனையடுத்து, அங்குள்ளவர்களால் மீட்கப்பட்ட இருசக்கர வாகனஓட்டி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். 

தசரத் என்ற 50 வயதுடைய நபர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மேடக் மாவட்டம் விபத்து போல, ஆஸ்திரேலியவிலும் நடந்துள்ளது. வளைவுப்பகுதியில் நிற்கும்போது கவனம் தேவை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

விபத்தின் பதறவைக்கும் காணொளி இங்கே

இதையும் படிங்க: காய்கறி வியாபாரிகள் மீது தறிகெட்டு பாய்ந்த லாரி; 10 பேர் பரிதாப பலி., 20 பேர் படுகாயம்.!