இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த சமையல் எண்ணெய் விலை... ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா.?



Increased cooking oil rate

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக சமையல் எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது.

நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய ரீஃபைண்ட் ஆயில் எனப்படும் சூரியகாந்தி எண்ணெய் 70 சதவிகிதம் உக்ரைனில் இருந்தும் 20 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்தும் தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது . ஆனால் இரு நாடுகளும் இடையேயும் கடுமையான போர் நிலவி வருவதால் எண்ணெய் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

Cooking oil

இதனால் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. பாமாயிலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது .கடந்த வாரம் ரூ 125 க்கு விற்கப்பட்ட பாமாயில் தற்போது ரூ 50 விலை உயர்ந்து ரூ 175 க்கு விற்கப்படுகிறது .

கடந்த வாரம் ரூ 135 விற்கப்பட்ட சன் பிளவர் ஆயில் தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 185 க்கு விற்கப்படுகிறது . அதுமட்டுமின்றி சன் பிளவர் ஆயில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . அதேபோல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.