மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விளையாட சென்ற 9 வயது சிறுமி.. திடீரென பூட்டிக்கிடந்த வீடு.. உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி.!
பீகார் மாநிலம், கோபல்கஞ் மாவட்டத்தில் உள்ள பக்ரவுர் என்னும் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டிற்கு அருகில் விளையாட சென்றுள்ளார். விளையாட சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தேடி பார்த்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமியின் வீட்டிலிருந்து 200மீ தொலைவில் உள்ள ஜெய்கிஷோர் ஷா என்பவரின் வீடு திடீரென பூட்டி கிடந்துள்ளது. அதனையடுத்து சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, அங்கு ரத்தக்கறை படிந்த ஸ்டீல் பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனைத் திறந்து பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் காணாமல் போன 9 வயது சிறுமியின் உடல், சாக்குப் பை ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு சிறுமியின் பெற்றோர் கதறித் துடித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜெய்கிஷோர் அந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. போலீசார் தலைமறைவான ஜெய்கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.