இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சித்த 3 பாக்.., அதிரடி என்கவுண்டர்.. இந்திய இராணுவம் அதிரடி.!



Indian Army BSF Encounter 3 Drug Smugglers in Jammu Kashmir Samba Region

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சம்பா பகுதியில், எல்லைதாண்டி போதைப்பொருளை கடத்த முயற்சித்த 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். 

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து, சர்வதேச எல்லை வழியாக போதைப்பொருளை கடத்த முயற்சித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு என்கவுண்டர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

indian army

சுட்டு கொல்லப்பட்ட கடத்தல் காரர்களிடம் இருந்து 36 கிலோ ஹெராயின் போதைப்பொருள், பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனரா? என விசாரணை நடந்து வருகிறது.