அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் வழங்கிய நன்கொடை.. எவ்வளவு தெரியுமா..?



Indian president donated 5 lakhs for ramar temple construction work

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்கொடை வழங்கியுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்க இருக்கிறது. ராமர் கோயில் வளாக ஒட்டுமொத்த கட்டுமான பணிக்கு ஆகும் செலவு சுமார் 1,100 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், கோயிலுக்கு மட்டும் ரூ.300 முதல் 400 கோடி வரை செலவு செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடை வசூலிக்கும் பணி இன்று தொடங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதித் திரட்டும் பணி 5,25,000 கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டின் முதல் குடிமகன் என்ற பெயரில் நன்கொடை வசூலில் பணி, இந்திய குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.

நன்கொடை வசூலிப்பதற்காக இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் இந்திய குடியரசு தலைவர் தனது சார்பில் ரூ.501,000 நன்கொடையாக வழங்கியுள்ளார். அதேபோல் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நன்கொடையாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.