மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JUSTIN: நடுவானில் பயணி செல்போனில் தீ.. பதறிப்போன மக்கள்., திக்.. திக்.. திக்.. நிமிடங்கள்.!
விமானத்தில் பயணம் செய்த பயணியின் செல்போன் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், தீ விமான பணியாளர்களால் விரைந்து அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் நகரில் இருந்து, டெல்லிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான A320 6E-2037 விமானம் இன்று வந்துகொண்டு இருந்தது. விமானத்தில் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருக்கும் போது, பயணி வைத்திருந்த செல்போனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணி மற்றும் அவருடன் இருந்தவர்கள் கூச்சலிடவே, விமானத்தில் இருந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு செல்போன் தீயை அணைத்தனர்.
செல்போன் தீப்பிடித்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை. விமானமும் பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது என மூத்த விமான கண்காணிப்பு நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.