மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: இன்புளூயன்சா வைரஸ் எதிரொலி.. நாளை முதல் 26-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!
பருவம் மாறிய பருவமழை மற்றும் கோடையின் காரணமாக தற்போது அது சார்ந்த நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மார்ச் தொடக்கம் முதல் இதுவரை சுமார் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
H3N2 உறுதி செய்யப்பட்ட நிலையில், அது குளிர்காலத்தில் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தொற்று என்றாலும் அதன் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, புதுச்சேரியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 16 முதல் வரும் 26-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.