உலக சாதனை படைக்கவுள்ள பலாப்பழம்.! சந்தோசத்தில் விவசாயி குடும்பம்!நீளம் மற்றும் அகலம் மட்டும் எவ்வளவு தெரியுமா?



Jackfurit will go for world record

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள எடமுலக்கல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜான்குட்டி. இவரது தோட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக மிக பெரிய அளவில் பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது. அதன் நீளம் 97 சென்டிமீட்டரும், 51.5 கிலோ எடையும் கொண்டிருந்தது. 

அதனை பார்த்த ஜான்குட்டியின் நண்பர்கள் இப்பழம் கண்டிப்பாக உலக சாதனை படைக்கும் என கூறி உலக சாதனைப் பதிவுக்கு முயற்சிக்க வலியுறுத்தியுள்ளனர். அதனை அடுத்து இது குறித்து தேடியபோது இதற்கு முன்னதாக கனமான பலாப்பழம் ஒன்று 42.72 கிலோ எடையில் புனேவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

world record

எனவே நானும் கின்னஸ் உலக சாதனைக்கும் லிம்கா புத்தகத்திற்கும் விண்ணப்பித்துள்ளதாக ஜான்குட்டி கூறியுள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி 2016 அன்று புனேவில் உள்ள ஜாக்ஃப்ரூட் கம்பெனியுடன் தொடர்புடைய ஒரு பண்ணையில் 42.72 கிலோ எடையும் 57.15 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட ஒரு பலாப்பழம் பதிவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜான்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டிப்பாக தனது பலாப்பழம் உலக சாதனை படைக்கும் என நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர்.