#Breaking: 38 பேர் பலியான விஷசாராய விவகாரம்; பார்வை குறைபாடை சந்திக்கும் நோயாளிகள்.. கண்ணீரில் உறவினர்கள்.!



Kallakurichi Liquor Case Eye Issue reported 

 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்குமேற்பட்டோர், அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிக்குடித்தனர். கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாக தெரியவரும் நிலையில், போதைக்காக கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 38 பேர் பலியாகி இருக்கின்றனர். மருத்துவமனையில் 82 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்பார்வை பிரச்சனை

இந்நிலையில், விஷ சாராயம் குடித்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 44 பேர் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மருத்துவமனையில் 90 க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சேலத்தில் அனுமதியான 44 பேரில், 10 பேருக்கு கண்பார்வையில் பார்வை மங்கள் தன்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு மட்டும் கண்பார்வை பறிபோயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிர் பயம்; வீடு-வீடாக சோதனை நடத்தி 32 பேர் மீட்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டோரில் பலரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. அதே வேளையில், கண்பார்வை ஒருசிலருக்கு மங்கலாக செய்திகள் வெளியாகி, கூடுதல் கவலையை உறவினர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள்? - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் தமிழகம்.!