கள்ளச்சாராயம் குடித்து உயிர் பயம்; வீடு-வீடாக சோதனை நடத்தி 32 பேர் மீட்பு.. மருத்துவமனையில் அனுமதி.!



Kallakurichi Karunapuram Person 32 Rescued from House and Admitted on Hospital 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷத்தன்மை கொண்ட மெத்தனால் சாராயம் குடித்த 120 க்கும் மேற்பட்டோரில், 37 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதியான 22 நபர்களும், சேலத்தில் அனுமதியான 9 பேரும் என மொத்தமாக 37 பேர் பலியாகி இருக்கின்றனர். 

இந்த விவகாரத்தில் விஷச்சாராயம் விற்பனை செய்த சாராய வியாபாரி கோவிந்தன், அவரின் மனைவி ரேவதி, தாய் ஜோதி, தம்பி தாமோதரன் உட்பட மொத்தமாக 10 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிங்க: #Breaking: கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள்? - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி.. அதிர்ச்சியில் தமிழகம்.!

32 பேர் மீட்பு

இந்நிலையில், விஷச்சாராயம் அருந்திய பலரும், தங்களின் வீடுகளில் குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீடு-வீடாக சோதனை நடத்தி சுமார் 32 பேரை மீட்டனர். இவர்கள் அனைவரும் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

இதையும் படிங்க: "முதல்வர் பதவி விலகுக" - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் காட்டம்.!