மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புனீத் ராஜ்குமார் இன்னும் வாழ்கிறார் - தம்பதியின் நெகிழ்ச்சி செயல்..!
ஸ்ரீதரா - சவிதா திருமண தம்பதியினர், தங்களின் திருமண அழைப்பிதழில் மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் உருவத்தை பதிவு செய்து, "ஜீவா எப்போதும் வாழ்கிறார்" என்ற வரியுடன் பத்திரிகையை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
பிரபல கன்னட திரையுலக நடிகர், சாண்டல்வுட் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்தார். அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும், அவர் செய்த பல உதவிகள் அவரது ரசிகர்கள், கன்னட மக்களால் மறக்க முடியாமல் அவரை நினைவில் வைத்து தாங்கி வருகின்றனர். மேலும், மறைந்த புனீத் ராஜ்குமார் என்ற அப்புவின் பெயரில் இரத்த தானம், கண்தானம் என பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகா ஹோசூர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீதரா. பாகல்கோட் கிரிராசூர் கிராமத்தை சார்ந்தவர் சவிதா. இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 27 ஆம் தேதி ஹோசூர் கிராமத்தில் உள்ள சித்தேஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்காக தம்பதியின் பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருந்த நிலையில், தம்பதிகளின் விருப்பத்தையும் கேட்டுள்ளார். அதன்போது, தம்பதிகள் மறைந்த புனீத் ராஜ்குமாரின் உருவத்தை பதிவிட்டு, அவர் எப்போதும் வாழ்கிறார் என்ற வாசகத்துடன் அழைப்பிதழை தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளின் விருப்பத்தை புரிந்துகொண்ட பெற்றோர், ஸ்ரீதரா - சவிதா தம்பதியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவர்கள் கூறியவாறு திருமண அழைப்பிதழை தயார் செய்துள்ளனர். இதுகுறித்து தம்பதிகள் தெரிவிக்கையில், "நாங்கள் இருவருமே புனீத்தின் ரசிகர்கள். அப்புவுடைய மரணம் எங்களுக்கு பெரும் வலியையும், இழப்பையும், சோகத்தையும் தந்தது.
புனீத் ஏழை - எளிய குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்தார். பல குடும்பங்களை வாழ வைத்துள்ளார். இவ்வாறு அவர் செய்த நற்பணிகளை கூறிக்கொண்டே செல்லலாம். அதனால் அவரது உருவத்தை வெளியிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தி எங்களின் இல்வாழ்க்கையை தொடங்குகிறோம்" என்று தெரிவித்தனர்.