மதுபோதையில் வந்த இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த ரேபிடோ ஓட்டுநர்.. பெங்களூரில் பயங்கரம்.!



Karnataka Bangalore Electronic City Rapido Driver Raped a girl with his Friend and Lover

 

இரவில் மதுபோதையில் தோழியை வீட்டிற்கு செல்ல ரேபிடோ செயலி புக் செய்த பெண்ணை, ஓட்டுநராக வந்த கயவன் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியில் வசித்து வரும் பெண்மணியொருவர், தனது தோழியின் வீட்டில் மதுபானம் அருந்தி இருக்கிறார். அவருக்கு போதை ஏறிய பின்னர், 25ம் தேதி இரவில் மற்றொரு தோழியின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். 

தோழி போதையில் இருப்பதால் வேண்டாம் என கண்டித்தும் பலனில்லை. ரெபிடோ இருசக்கர வாகன டாக்சியை பதிவு செய்த இளம்பெண், ரெபிடோ டெலிவரி நபருடன் பயணம் செய்துள்ளார். இளம்பெண் போதையில் இருப்பதை புரிந்துகொண்ட ஓட்டுநர், அவரை தனது காதலியோடு தங்கியுள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

karnataka

வீட்டிற்கு தனது நண்பரை வரவழைத்த ஓட்டுநர், அங்கு இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விசயத்திற்கு ஓட்டுனரின் காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் ரெபிடோ ஓட்டுனரின் பின்புலம் குறித்து விசாரிக்கையில், அவன் பல குற்றவழக்கில் தொடர்புடையவன் என்பதை உறுதி செய்தனர். பீகாரை சேர்ந்த சகாபுதீன், கூட்டாளி அஷ்ரப், காதலி ஆகியோர் சேர்ந்து செய்த குற்றச்செயல் அம்பலமானது. மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.