"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
விதவைப்பெண்கள் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் கைவரிசை.. 6 ஆவது மனைவி கதறல்.!
திருமண வரன்தேடும் இணையத்தில், மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை குறிவைத்து மோசடி செய்து பிழைத்து வந்த கயவன், 6 ஆவது மனைவியின் புகாரால் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தூரவாணி நகர் பகுதியை சார்ந்த பெண்மணி தகசீன் (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து செய்துள்ளார். பின்னர், தனியார் திருமண தகவல் மையம் மூலமாக சையத் என்பவருடன் பழக்கம் ஏற்படவே, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பெங்களூர் மாநகர காவல் ஆணையர் கமல் பந்த்திடம் சையத் மீது தகசீன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "கணவர் சையத் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார். விவாகரத்து பற்றி தெரிவித்து அவரை திருமணம் செய்தேன்.
திருமணத்திற்கு பின்னர் வீடு கட்ட, தொழில் தொடங்க எனக்கு பணம் வேண்டும். அதற்கு பணம் வாங்கி வா என கொடுமை செய்தார். அவருக்கு எனது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.8 இலட்சம் வரதட்சணையாக பெற்றுத்தந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார். அவர் குறித்து விசாரணை செய்தபோது, அவர் ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
அவர் தனியார் திருமண தகவல் மையத்தில் விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து மோசடி செய்வதை தொழிலாக செய்து வந்துள்ளார். எனக்கு முன்னதாகவே 5 விதவை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் வரதட்சணை கேட்டு பணம் வாங்கி இருக்கிறார். இந்த திருமத்தை மறைத்து என்னை 6 ஆவதாக திருமணம் செய்த சையத், என்னிடமும் வரதட்சணை கொடுமை செய்கிறார். அவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.