மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகிரெட் தூசியை கீழே போட முயற்சி; 33 வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஐடி ஊழியர் பரிதாப பலி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் திவென்ஸ் சர்மா. கடந்த சனிக்கிழமை இரவு இவர் தனது இந்திரா நகரில் உள்ள வீட்டிலிருந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு படத்திற்கு சென்றுள்ளார்.
பின் நள்ளிரவு 02:30 மணியளவில் பப்புக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் பெண் நண்பரும் வீட்டின் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அச்சமயம் வீட்டில் இருந்த சிகரெட் சாம்பலை, பால்கனி வழியாக சர்மா வீசி இருக்கிறார்.
அப்போது, நிலைதடுமாறி அவர் 33வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இது எதையும் அறியாத அவரது பெண் தோழியும், விரைவில் சர்மா வேலைகளை முடித்துவிட்டு வந்து உறங்குவார் என்ற எண்ணத்தில் அறையை சுத்தம் செய்து விட்டு படுத்து உறங்கியுள்ளார்.
மறுநாள் காலையில் மக்கள் கீழே தவறி விழுந்த நபரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டபோது சம்பவம் அம்பலமானது.
காவல் துறையினர் ஷர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உத்திர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷர்மாவின் தந்தை முன்னாள் விமானப்படை ஊழியர் ஆவார். ஐடி நிறுவனத்தில் நல்ல வேலையில் ஷர்மாவும் பணியாற்றி வந்துள்ளார்.