திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த தந்தை, மகன் உடல் நசுங்கி பரிதாப மரணம் : நெஞ்சை ரணமாக்கும் சோகம்.!
சொந்த ஊருக்கு சென்று திரும்புகையில் தந்தையும், மகனும் ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து பலியான சோகம் பத்ராவதியில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் மோகன் பிரசாந்த் (வயது 70). பணி ஓய்வுக்கு பின்னர் மோகன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இவரது மகன் அமர்நாத் (வயது 35). இருவரும் சம்பவத்தன்று வேலை விஷயமாக பத்ராவதிக்கு வருகை தந்துள்ளனர். பின்னர், கடந்த 11-ம் தேதி பெங்களூர் செல்ல பத்ராவதி இரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இவர்கள் தாளகோப்பா - மைசூர் இரயிலில் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், இருவரும் இரயில் வரும் நேரத்திற்கு சிறிது தாமதமாகி ஓடும் இரயிலில் ஏற முயற்சித்துள்ளனர். அப்போது, அமர்நாத் கால் இடறி இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொன்டுள்ளார்.
இதனால் பதறிப்போன மோகன் மகனை காப்பாற்றச்சென்றபோது, அவரும் கால் இடறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் அமர்நாத் பலத்த காயமடைந்து உடல் நசுங்கி பலியாகினார். மோகன் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து பத்ராவதி இரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.