மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமிக்கு பள்ளிக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் பலி: நிகழ்விடத்திலேயே பிரிந்த உயிர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரே தாலுகா, கேசவலூ ஜோகன்னாகெரே பகுதியை சேர்ந்த சிறுமி ஸ்ருஷ்டி (வயது 7).
சிறுமி அங்குள்ள தாதரஹள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படித்து வருகிறார், இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார்.
அச்சமயம் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழவே, அங்கிருந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.