மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தை கண்முன் 7 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..! மாரடைப்பால் இறக்கும் வயதா அது?..!!
7 வயது சிறுவன் தந்தையின் கண்முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டம், அமரமுதனூர் குக்கூஜாத்கா கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரின் மகன் மோக்ஷித் கே.சி (வயது 7). சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி சிறுவன் வழக்கம்போல பள்ளிக்கு சென்றிருந்த சமயத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறான். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர் பள்ளிக்கு விரைந்து மகனை அழைத்துக்கொண்டு நிலையில், அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான். பதறிப்போன சந்திரசேகர் தனது மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகனின் இறப்பு செய்தியை அறிந்த தந்தை கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.