மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாவில் காதலில் விழுந்துடாதீங்க.. காதலன், நண்பனால் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. கண்ணீர் கதறல்..!.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், 'பத்தாம் வகுப்பு பயின்று வரும் மகள் கடந்த 24ஆம் தேதி காலை 8 மணிக்கு பள்ளிக்குச் சென்றார். மீண்டும் அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்'.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வசித்து வரும் தீபக் என்ற 19 வயது இளைஞருடன் சிறுமி பழகி வந்து அவருடன் சென்றது தெரியவந்தது. சிறுமியை தீபக் தனது நண்பர் வீட்டிற்கு செல்லுமாறு திருவள்ளூருக்கு ரயில் ஏற்றி விட்ட நிலையில், தீபக்கின் நண்பர் அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியை சார்ந்த சதீஷ்குமார் என்பவர் சிறுமியை அழைத்துசென்று அவருக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி மற்றும் அவருடன் இருந்த சதீஷ்குமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், சிறுமியை மிரட்டி காதலன் தீபக் மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாற்றப்படவே, விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமியிடத்தில் பழக்கத்தை ஏற்படுத்தி காதலனாக அறிமுகமான தீபக் மற்றும் அவனது நண்பன் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. கூட்டு பாலியல் பலாக்காரம் செய்த இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.