மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொழிலில் நஷ்டம், கடன் தொல்லையால் சோகம்.. தாய், தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம், ஹேமாவதி நகரில் வசித்து வருபவர் சத்திய பிரசாத் (வயது 54). இவரின் மனைவி அன்னபூர்ணா (வயது 50). இந்த தம்பதிக்கு கவுரவ் என்ற 21 வயது மகன் இருக்கிறார். சத்திய பிரசாத் பேளூரு கிராமத்தில் சொந்தமாக பெட்ரோல் விற்பனை செய்யும் நிலையத்தை நடத்தி வந்துள்ளார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த சில மாதத்திற்கு முன்னதாக பெட்ரோல் விற்பனை நிலையத்தினை விற்பனை செய்திடவே, வேறு தொழிலை தொடங்க முயற்சி எடுத்துள்ளார். அதற்கு தேவைப்பட்ட பணத்தை தெரிந்தவர்களிடம் கடனாக பெற்றுள்ளார். புதிய தொழிலும் அவருக்கு கைகொடுக்காத நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க தொடங்கியுள்ளனர்.
இதனால் சத்திய பிரசாத் மற்றும் அவரின் குடும்பத்தினர் மனமுடைந்து காணப்படவே, குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, நேற்று இரவில் சத்திய பிரசாத், அன்னபூர்ணா மற்றும் கவுரவ் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அண்டை வீட்டார் கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போதும், வீட்டில் இருந்து யாரின் குரலும் கேட்காததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வாயில் நுரைதள்ளிய நிலையில் 3 பேரும் பிணமாக இருந்துள்ளனர்.
இவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.