மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை நிர்வாணப்படுத்தி, அடித்து நொறுக்கி ஊர்வலம் சென்ற மக்கள்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் மேகராஜ். இவர் ஹாசன் நகரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள மஹாராஜா பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை பாலியல் ரீதியாக மேகராஜ் துன்புறுத்தி இருக்கிறார். இதனைக்கண்ட உள்ளூர் வாசிகளில் சிலர், கும்பலாக சேர்ந்து மேகராஜை அடித்து துவைத்துள்ளனர்.
மேலும், மேகராஜின் ஆடைகளை அவிழ்த்து, பரபரப்பான போக்குவரத்து சாலையாக கருதப்படும் ஹேமாவதி சில அருகே நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மக்களிடம் இருந்து மேகராஜை மீட்டு கைது செய்தனர். மேகராஜை தாக்கி நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றதாக 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.