மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தம்பி இறந்த செய்திகேட்டு அக்கா செய்த பகீர் காரியம்.. பாஜக எம்.எல்.ஏ பேரன், பேத்தி விபரீதம்.!
தன்னுயிருக்கு உயிரான சகோதரன் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்த சகோதரியும் தற்கொலை செய்துகொண்ட சோகம் ஹாவேரியில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ நேரு ஓலேகர். இவரது மகன் சந்துரு. சந்துருவுக்கு நாகராஜா சந்துரு ஸலவாடி என்ற 16 வயது மகனும், பாக்கியலட்சுமி சந்திரா ஸலவாடி என்ற 18 வயது மகளும் என 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
சந்துருவின் மகன் நாகராஜா சந்துரு 10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில், சரிவர பள்ளிக்கு செல்லாமல், வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் சந்துருவுக்கு தெரியவரவே, அவர் தனது மகனை கண்டித்து படிப்பில் நாட்டம் செலுத்தக்கூறி அறிவுறுத்தி இருக்கிறார்.
இதனால் மிகுந்த மனவேதனைக்கு சென்ற நாகராஜா சந்துரு, வீட்டில் தனியாக இருக்கையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த நாகராஜா சந்துருவின் அக்கா பாக்கியலட்சுமி ஸலவாடி, கல்லூரியில் இருந்து மருத்துவமனைக்கு வந்து தனது சகோதரனின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
பின்னர், அனைவரையும் வீட்டிற்கு சென்ற நிலையில், துக்கம் தாளாது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது உயிருக்கு உயிரான தம்பி தற்கொலை செய்துகொண்ட உண்மையை அறிந்ததில் இருந்து மனத்துயரில் இருந்து வந்த பாக்கியலட்சுமி, அன்றைய நாளிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்தடுத்து ஏற்பட்ட மரணத்தால் குடும்பத்தினர் பெரும் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இதுகுறித்து படாகி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.