மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேறு மதத்தை சேர்ந்த நபருடன் விபரீத காதல்; காதல் ஜோடியை தாக்கிய 6 பேர் கும்பல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியை பகுதியை சார்ந்த 40 வயதாகும் லாரி ஓட்டுனருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இவர்கள் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் கடுமையாக தாக்கி இருக்கின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜோடி தாக்கப்படும் வீடியோ வைரலானதன் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.