மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயதான தாயை கோவிலில் அம்போவென விட்டுச்சென்ற மகன்.. நெஞ்சை உலுக்கும் ஏமாற்றம்.. பரிதவித்த தாய்.!
கோவிலுக்கு 80 வயது தாயை அழைத்து வந்த மகன், அவரிடம் நம்பர் எழுதாத பேப்பர் மற்றும் சிம் இல்லாத செல்போனை கொடுத்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல், ஹீலிகி கிராமத்தில் இருக்கும் ஹீலிகோம்மா கோவிலில் 80 வயதாகும் மூதாட்டி நேற்று கோவில் நடை அடைக்கும் வரை இருந்துள்ளார். இதனைக்கண்ட மக்கள் மூதாட்டிக்கு உணவு மற்றும் போர்வையை கொடுத்துள்ளார்.
இதன்பின், மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தவாறு அவரின் வீட்டு முகவரி குறித்து விசாரித்தபோது பதில் வரவில்லை. தனது பெயர் காசிம் பீ என்று மட்டும் கூறியுள்ளார். மேலும், அவரின் ஊர் உஜ்ஜயினி என்பது தெரியவந்தது.
மூதாட்டி மகனுடன் கோவிலுக்கு வந்த நிலையில், அவரின் பையில் செல்போனை கொடுத்துவிட்டு மகன் சென்றுள்ளார். மேலும், தனது அலைபேசி நம்பரை காகிதத்தில் எழுதி கொடுத்ததாக கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் கூறியதை கேட்டு காகிதத்தை பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதில் எந்த அலைபேசி நம்பரும் இல்லாத நிலையில், செல்போனை வாங்கி பார்த்தவர்களுக்கு சிம் கார்டே இல்லாது பேரதிர்ச்சியை தந்துள்ளது. இதனையடுத்து, முனிபாரத் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூதாட்டியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு, அவரின் மகன் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.