மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய காதலனை கரம்பிடிக்க கைக்குழந்தை ஆற்றில் வீசி கொலை: தாயின் அதிர்ச்சி செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரா மாவட்டம், பணகள்ளி பகுதியை சேர்ந்த பெண்மணி பாக்கியம்மா (வயது 21). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, தற்போது தேவராஜ் என்ற 1.3 வயதுடைய கைக்குழந்தை இருக்கிறது.
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இளம்பெண் தனது தாயாரின் வீட்டில் கைக்குழந்தையுடன் இருக்கிறார். இதனிடையே, பெண்மணிக்கு வேறொருவருடன் நட்பு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
அவரை தற்போது காதலிப்பதாகவும் கூறப்படும் நிலையில், அவரோ குழந்தையை கைவிட்டு வந்தால் தான் உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய பெண்மணி அது சார்ந்த முயற்சியை எடுக்க, மகளின் நிலையை அறிந்த பாக்கியம்மாவின் தாய் கண்டித்து இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முந்தினம் பாக்கியம்மாவின் தாய் வீட்டில் துணிதுவைத்துக்கொண்டு இருந்தார். அப்போது, தனது கைக்குழந்தையை தன்னுடன் எடுத்து சென்ற பெண்மணி, அங்குள்ள கன்வா ஆற்றில் குழந்தையை வீசி இருக்கிறார்.
பின் மக்களை நம்பவைக்க பெண்மணி குழந்தை தவறி ஆற்றில் விழுந்துவிட்டதாக அலறி இருக்கிறார். விரைந்து வந்த மக்கள் குழந்தையை மீட்க முயற்சித்தும் பலன் இல்லை. மறுநாள் காலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இதனிடையே, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையை தொடர்ந்து, உண்மை அம்பலமாகவே பாக்கியம்மாவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.