நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
எவன் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது! வெடிக்கும் போராட்டம்! கொதித்தெழுந்த பேட்ட இயக்குனர்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக புறப்பட்டு சென்றுள்ளனர். அப்பொழுது போலீசார் மாணவர்கள் தடியடி நடத்தியதால் போராட்டம் வெடித்தது. மேலும் சாலைகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இரு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் 50 மாணவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து வகுப்பறையை சேதப்படுத்தி விட்டதாகவும் மாணவர்களால் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதனால் டெல்லியில் வன்முறைகள் வெடித்தது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலர் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பொங்கியெழுந்து இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் இந்தியா தொடர்ந்து மதச்சார்பற்ற நாடாகத் தொடர வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு கைவிடப்பட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் மீதான அடக்குமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் அதில் அவர் இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது எனவும் பதிவிட்டுள்ளார்.
Citizenship Amendment Act - Sounds seriously wrong & against Secularism..
— karthik subbaraj (@karthiksubbaraj) December 17, 2019
Let's keep India Secular
Say NO to CAA
Say NO to NRC
Say NO to Police Violence on Students
இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது..... #IndiansAgainstCAB #JamiaProtests