மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில், ஸ்ரீ அன்னபூரணியின் இன்றைய அலங்காரம்.!
வாரணாசியில் உள்ள காசியில் அமைந்துள்ளது காசி அன்னபூரணி ஆலயம். மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கும் அன்னபூரணி, இந்து மதத்தின் தெய்வங்களில் ஒருவராக இருக்கிறார். அன்னம் என்பது உணவையும், பூரணம் என்பது முழுமையையும் குறிக்கிறது. அன்னபூரணி பார்வதியின் மற்றொரு அம்சமாவார்.
கா என்ற எழுத்து காரணத்தையும், ச என்ற எழுத்து அமைதியையும், இ என்ற சொல் உடலையும் குறிக்கிறது. இதன் பேரிலேயே இவ்வூரின் பெயரும் அமையப்பெற்றுள்ளது என்று கூறுவார்கள்.
இந்து சமய புராணத்தின் படி, சிவன் தனது மனைவி பார்வதியை பார்த்து, உலகம் மாயை. இம்மாயையில் உணவும் ஒரு பகுதி என்று கூறினார். இதனால் பார்வதி சீற்றமடைந்து, உலகம் பொருளால் ஆனது. பொருட்களுக்கு ஆற்றல் சக்தி உண்டு என்ற விஷயத்தை உணர்த்த மறைந்தார்.
பார்வதியின் மறைவுக்கு பின்னர் உலக இயக்கம் பாதிக்கப்பட்டு, உலகமே வெறுமையானது. உலகின் எந்த இடத்திலும் உணவு இல்லாமல் மக்கள் பசியால் வாடியுள்ளனர். மக்களின் பசியை அறிந்த அன்னை பார்வதியே, காசியில் தோன்றி உணவுக்கூடத்தை அமைத்தார்.
உடனடியாக சிவன் தனது உணவுத்தட்டையும் எடுத்து சென்று பார்வதியிடம், "உலகம் பொருளால் ஆனது. மாயை கிடையாது என்பதை தெரிந்துகொண்டேன்" என்று கூறினார். இதனைக்கேட்டு மகிழ்ச்சியான அன்னை ஸ்ரீ பார்வதி, தனது கைகளால் உனவை வணங்கி மகிழ்ச்சியடைந்தார்.