மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலிரவு முடிந்ததும் நகை, பணத்துடன் கம்பி நீட்டிய மணமகன்.. விசாரணையில் காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி தகவல்.!
முதல் திருமணம் நடைபெற்றதை மறைத்து, இளம்பெண்ணை திருமணம் செய்த கயவன் முதலிரவு முடிந்ததும் நகை மற்றும் பணத்துடன் மாயமான பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள அடூர், காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் ரஷீத் (வயது 30). இவருக்கும் பழக்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இதனையடுத்து, இருவீட்டார் முன்னிலையில் கடந்த 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
திருமணம் முடிந்ததும் இருதரப்பு வீட்டிலும் விருந்து நடைபெற்ற நிலையில், அன்றைய நாளின் இரவில் முதலிரவு சடங்குகளும் மணமகள் வீட்டில் வைத்து நடைபெற்றுள்ளது. முதலிரவு முடிந்ததும் மறுநாள் அதிகாலை 3 மணியளவில் மணமகன் திடீரென வீட்டில் இருந்து புறப்படவே, அவரிடம் மணமகள் எங்கு செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு அசாருதீன் தனது நண்பன் விபத்தில் சிக்கி இருக்கிறான். அவனுக்கு உதவ செல்கிறேன் என்று கூறவே, இதனை நம்பிய மணப்பெண்ணும் கணவரை அனுப்பி வைத்துள்ளார். வீட்டில் இருந்து சென்ற அசாருதீன் மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில், போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. அது ஸ்விச் ஆப் என தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் வீட்டில் சோதனையிடுகையில், மணமகள் அணிந்திருந்த 30 சவரன் நகைகள் மாயமாகியிருந்தது அம்பலமானது. அறையில் இருந்த ரூ.2.75 இலட்சம் ரொக்கமும் காணவில்லை. இந்த விஷயம் தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர்கள் அடூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அசாருதீன் ரஷீத்தை தேடுகையில், அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தனது முதல் மனைவியின் இல்லமான ஆலப்புழா சேப்பாடு பகுதியில் பதுங்கியிருந்த அசாருதீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.