மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை.. சுகாதாரப்பணிகள் தீவிரம்., அலெர்ட்டாகும் அதிகாரிகள்.!
குரங்கு அம்மை பரவலை கட்டுக்குள் வைக்க மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாட்டில் பரவி வந்த குரங்கு அம்மை நோயானது கேரளாவிலும் உறுதி செய்யப்பட்டது. வளைகுடாவில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை உறுதியானதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அதனைப்போல மற்றொருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகவே, அவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டார். வளைகுடாவில் இருந்து கடந்த 6-ந்தேதி வருகை தந்தவரின் இரத்த மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் குரங்கு அம்மை உறுதியானது.
இதனால் கேரளாவில் மொத்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ள நிலையில், குரங்கு அம்மை பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.