மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை எப்படி WhatsAppல் பிளாக் பண்ணுவ?.. பெண்ணின் மார்பு, கழுத்தில் குத்தி கொலை முயற்சி.. கேரளாவில் பயங்கரம்.!
செல்போனில் தனது எண்ணை பிளாக் செய்ததால் பெண்ணை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, ஒத்தப்பாலம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணிடம், உறவினரான ப்ரூஸ் (வயது 27) என்பவர் பழகி வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதம் காரணமாக இளம்பெண் ப்ரூஸின் செல்போன் நம்பரை வாட்சப் மற்றும் செல்போன் அழைப்புகளில் பிளாக் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ப்ரூஸ் இளம்பெண்ணின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்து மற்றும் மார்பில் குத்தி தப்பியோடியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ப்ரூஸின் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் இருந்தது அம்பலமானது.