மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கைக்குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை எரித்து கொலை?... நாடே அதிர்ச்சி.. பதறவைக்கும் சம்பவம்.!!
5 பேர் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்து குடும்பத்தினர் அனைவரும் மரணமடைந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், தலவபுரம் வர்க்கலா நகரில் வசித்து வருபவர் பிரதாபன் (வயது 62). இவர் அங்குள்ள புத்தன் சந்தையில் காய்கறிக்கடை வைத்துள்ளார். பிரதாபனின் மனைவி செர்லி (வயது 54). இந்த தம்பதியின் மூத்த மகன் அகில் (வயது 26). அகிலின் மனைவி அபிராமி (வயது 24). அகில் - அபிராமி தம்பதிக்கு பெயர் வைக்காத 8 மாத கைக்குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசிக்கிறார்கள்.
இந்நிலையில், பிரதாபனின் வீட்டில் அதிகாலை 01:45 மணியளவில் கரும்புகை வெளியேறிய நிலையில், நள்ளிரவில் புகையை கண்ட பொதுமக்கள் வர்க்கலா காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பிரதாபன், செர்லி, அகில், அபிராமி மற்றும் 8 மாத பச்சிளம் குழந்தை என 5 பேரும் உடல் கருகிய நிலையில் பிணமாக இருந்துள்ளனர்.
5 பேரின் உடலையும் மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்குகையில், மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் குடும்பத்தினர் 5 பேரும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அக்கம் பக்கத்தினர் 5 இருசக்கர வாகனம் வீட்டில் இருந்து வெளியே சென்றதாக தெரிவிப்பதால் கொலையா? எனவும் விசாரணை நடைபெறுகிறது.