டிவி ரிமோட் பேட்டரியை முழுங்கிய சிறுவன்; கேரளாவில் பரபரப்பு.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.. அலட்சியம் வேண்டாம்.!



Kerala Thiruvananthapuram ate TV Remote

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியாக இருந்த சிறுவன், வீட்டில் இருந்த டிவி ரிமோட்டின் பேட்டரியை முழுங்கியுள்ளான். இதனால் சிறிது நேரத்திலேயே சிறுவன் வயிறு வலியில் அழ ஆரம்பித்துள்ளான். இதை அறிந்த பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவனை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்த தருணத்தில் பேட்டரியை முழுங்கியுள்ளது உறுதியானது.

KERALA

உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் சிறுவனின் வயிற்றில் இருந்த பேட்டரி அகற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கூறியதாவது, "பேட்டரி குடலில் சென்று மாட்டி உள்ளதால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுவனின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

பேட்டரியை அகற்ற 20 நிமிடங்கள் ஆகின. பேட்டரி குடலில் மாட்டியதால் விரைவில் நீக்க முடிந்தது, வேறு இடத்தில் பேட்டரி மாட்டி இருந்தால் அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்திருக்கும். தற்போது சிறுவனின் உடல்நிலை நன்றாக உள்ளது" தெரிவித்தனர்.