மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டுப்பகுதியில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்... துண்டிக்கப்பட்ட வாலிபரின் தலையுடன் செல்பி எடுத்த கும்பல்...
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் முர்கு பகுதியைச் சேர்ந்தவர் கணுமுண்டா என்ற இளைஞர். இவருக்கு அதே ஊரை சேர்ந்த சாகர் முண்டா குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பமும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கணுமுண்டா வீட்டில் தனிமையில் இருந்த போது சாகர் முண்டா சில பேருடன் வந்து கணுமுண்டாவை கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து கணுமுண்டாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் சாகர் முண்டா, அவரது மனைவி மற்றும் 4 நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குமாங்கோப்லா காட்டுப் பகுதிக்கு கணுமுண்டாவை கடத்தி வந்து கொலை செய்து விட்டு அவரது தலையுடன் செல்ஃபி எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. பின் போலீசார் காட்டுப்பகுதிலிருந்து கணுமுண்டாவின் உடலை கைப்பற்றினர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.