மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சந்தைக்கு கொண்டு சென்றால் நஷ்டம்; வெங்காயம் பயிரிட்ட விவசாயி வேதனை... ஆடுகளை மேய விட்ட கொடுமை..!!
வெங்காய விலை வீழ்ச்சியடைந்ததால் விரக்தியடைந்த விவசாயி அவரது நிலத்தில் ஆடுகளை மேயவிட்டார்.
இந்தியாவில் சீசனுக்கு ஏற்ப மற்றும் விளைச்சலின் காரணமாக காய்கறிகளின் விலை மாறுபடும். இந்த அசாதாரண விலை மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக நீண்ட காலமாக புகார் கூறப்படுகிறது.
உற்பத்தி செய்த விவசாய பொருட்களை பெரிய சந்தைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு உற்பத்தி செய்த பொருளின் உள்ளீட்டு தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் வெங்காய விலை வீழ்ச்சியால், விவசாயிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டத்தில் உள்ள கய்ரவடி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாலு, அவரது 5 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐந்து ரூபாய்க்கு விலை போவதால், மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக சந்தைக்கு கொண்டு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால், மன உளைச்சலில் தன்னுடைய நிலத்தில் ஆடுகளை மேயவிட்டார்.