மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை பழிவாங்க ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட காதலன் கைது!
கேரளாவில் காதலியை பழிவாங்குவதற்காக அவருடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதில் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போதெல்லாம் காதலிக்கு தெரியாமல் தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளார். இதனிடையே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் எட்வினுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த எட்வின் தனது காதலியின் பெயரில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை உருவாக்கி இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த இளம் பெண் போலீசில் போரடித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் எட்வினை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.